ரிலையன்ஸ் பொருட்களைப் புறக்கணிக்குமாறு விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் போராட்டம்

0
5

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து ரிலையன்ஸ் பொருட்களைப் புறக்கணியுங்கள் எனக் கோரிக்கை அட்டைகள் ஏந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து பிரச்சாரம் செய்தனர்..!

 
அமைந்தகரை பேருந்து நிலையம், காதிபவன் அருகிலுள்ள ஜியோ டிஜிட்டல் அருகிலும், வில்லிவாக்கம் கொன்னூர் நெடுஞ்சாலை, மோகன் நர்சிங் ஹோம் அருகிலும் இரு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்..!


 
போராட்டத்தின் முடிவில் விவசாயிகளின் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், அம்பானி, அதானி குழுவின் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு இரு கட்சியினரும் பிரச்சார நோட்டீஸ் வழங்கினர்..!