இந்தியாதமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனை முன்பு உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சாம்பாரில் எலி இருந்ததால் நோயாளி குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்

கோவை அரசு மருத்துவமனை முன்பு உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சாம்பாரில் எலி இருந்ததால் நோயாளி குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்..!

கோவை அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் உள்ள டேஸ்டி என்ற ஹோட்டலில் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளி குடும்பத்தார் இட்லி மற்றும் சாம்பார் பார்சல் வாங்கியுள்ளார். இதனை பிரித்துப் பார்க்கும்போது சாம்பாரில் எலி இருந்துள்ளது…!

இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளி குடும்பத்தார் ஹோட்டல் கடைக்கு வந்து கேள்வி எழுப்பியதை அடுத்து கடை உரிமையாளர் லாவகமாக எலி இருந்த சாம்பாரை கடைக்குள் எடுத்துச்சென்று ஷட்டரை சாத்தி விட்டார்.தொடர்ந்து அங்கு பொதுமக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது…!

பின்பு மீண்டும் ஹோட்டல் கடையைத் திறந்து வியாபாரத்தை நடத்தி வருகிறார்.இந்த ஹோட்டலில் இதுவரை மூன்று முறை இம்மாதிரியான சம்பவங்கள் நடந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்…!

இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்…!

Related Articles

Back to top button