கோட்சேவை புகழ்ந்து ட்விட் : H.ராஜா பாணியில் அட்மின் மீது பழிபோட்ட பாஜக தலைவர்

0
175

தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ், நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று பாஜகவின் மூத்த தலைவர் ட்விட்டரில் பதிவிட்டதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது..!

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சை தேசபக்தர் என்று பாஜக (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் இந்துத்துவவாதிகள் அடிக்கடி கூறுவதால் சர்ச்சை ஏற்படுவது உண்டு. இந்நிலையில் நேற்று (நவம்பர் 15) நாதுராம் கோட்சேவின் நினைவு தினம் என்பதால் ஆந்திர மாநில பாஜக மூத்த தலைவர் நாகோத்து ரமேஷ் நாயுடு, கோட்சை தேசபக்தர் என்று தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்..!

நாகோத்து ரமேஷ் நாயுடு நேற்று ட்விட்டரில், “அவரது நினைவு தினத்தனறு, நாதுராம் கோட்சேவுக்கு நான் மிகவும் நன்றியுடன் வணக்கம் செலுத்தகிறேன். அவர் உண்மையான மற்றும் பாரத பூமியில் பிறந்த மிகப்பெரிய தேசபக்தர்” இவ்வாறு அவர் பதிவிட்டார். அவரது பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தனது ட்விட்டரை அட்மின் பயன்படுத்தியதாகவும், அவர்தான் கோட்சேவை புகழ்ந்து பதிவிட்டுள்ளதாக பொய் கூறி எச்.ராஜா போல நாயுடுவும் நழுவிவிட்டார்..!

இதனையடுத்து கோட்சேவை தேசபக்தர் என்று அழைத்தற்கு நாகோத்து ரமேஷ் நாயுடுவை பாஜக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது..!

பாஜக (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் இந்துத்துவவாதிகள், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவை வணங்கி வழிபட்டு வரும் நிலையில் அவரை புகழந்து பதிவிட்டு வருவதெல்லாம் இயல்பாக நடக்கக்கூடியதாகிவிட்டது. கோட்சேவை புகழ்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அட்மின் மீது பழிச்சுமத்தி தப்பிதித்துக்கொள்வதே பாஜகவினரது அடையாளமாக உள்ளது..!

இந்நிலையில் நெட்டிசன்கள் சமூக வளைத்தளங்களில் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்