கர்நாடகாவில் பெண் கவுன்சிலரை தரதரவென்று இழுத்துச்சென்ற பாஜக எம்.எல்.ஏ

0
249

கர்நாடகா மாநில பாஜக MLA, பெண் கவுன்சிலரை படிக்கட்டுகளிலிருந்து தரதரவென்று இழுத்த செல்லும் வீடியோ வைரலாகி கண்டனங்கள் எழுந்து வருகின்றது..!

கர்நாடகாவில் மகாலிங்கபூரில் கடந்த 10ஆம் தேதி நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 23 பேர் உள்ள நிலையில் பாஜகவில் 13 உறுப்பினர்களும், காங்கிரசில் 10 உறுப்பினர்களும் இருந்தனர். இதில் பாஜகவை சேர்ந்த கவுன்சிலர்கள் கோதாவரி பாத், சாந்தினி நாயக் , சவிதா ஹுரகாட்லி ஆகிய மூவரும் இந்த தேர்தலில் போட்டியிட பாஜக மூத்த நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனை பாஜக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்த ஆத்திரத்தால் மூன்று கவுன்சிலர்களும் பாஜவுக்கு எதிராக வாக்கு அளிப்பதாக முடிவெடுத்தனர். இதனையடுத்து அவர்களை வாக்களிக்க விடாமல் பாஜக எம்.எல்.ஏ, சவிதாவை பிடித்து இழுத்ததில் பட்டிக்கட்டுகளில் தடுமாறி கீழே விழுந்தார். அப்படியும் விடாமல் அவரை தரதரவென்று இழுத்துச்சென்றார் எம்.எல்.ஏ. அங்கிருந்த காவலர்கள் சவிதாவை போராடி மீட்டு வாக்குச்சாவடிக்குள் அனுப்பு வைத்தனர்.