உபியில் 50 குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அரசு ஊழியர் கைது

0
123

10 ஆண்டுகளாக 50 குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அரசு ஊழியர் கைது.

இந்தியா லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தில் 50 குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுள்ளதாக அரசு ஊழியர் ஒருவரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம்ங்கள் அதிகரித்து வருவது மக்களுக்கு தெரிந்ததே.

இவ்வாறு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் முக்கிய இடமாக உத்திரபிரதேசம் தற்போது தோன்றி வருகின்றது.

சில நாட்களுக்கு முன்னர் இந்தியா உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் 20 வயதான பட்டியலினப் பெண் ஒருவரை ஆதிக்க சாதியை சேர்ந்த நான்கு பேரால் பாலியல்
துஷ்பிரயோகம் செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை எற்படுத்தியது.

பொறியாளர் ஒருவர் 50 குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாண்டா மாவட்டத்தில் நீர்பாசனத்துறை பொறியாளரை கைது செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்..

சி.பி.ஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இவர் பத்து ஆண்டுகளாக குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து Video எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சித்ரகூட், பாண்டா, ஹரிம்பூரில் 5 முதல் 16 வயதுக்கு குறைந்த சிறைவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.