பீகாரில் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் பெண்

0
449

பீகாரில் 20 வயது இஸ்லாமிய பெண்ணை இருவர் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை. கொலையாளிகளை இதுவரை கைது செய்யாததால் உறவினர்கள் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்..!

பீகாரின் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த குல்னாஸ் என்ற 20 வயது முஸ்லீம் பெண்ணை, அக்டோபர் 30 அன்று பாலியல் பலாத்காரம் செய்து, உயிருடன் எரித்துள்ளனர். இதனையடுத்து குல்னாஸின் பெற்றோர் அவரை பாட்னாவில் உள்ள பி.எம்.சி.எச். மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக சேர்த்தனர். 15 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த குல்னாஜ் நான்கு நாட்களுக்கு முன்னர் பரிதபமாக உயிரிந்தார். இக்கொடூரச் செயலுக்கு சதீஷ் குமார் ராய் மற்றும் சந்தன் குமார் ராய் தான் கார்ணம் என்று பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்..!

இதுகுறித்து குல்னாஸ் தாயார் கூறுகையில், “என் மகளுக்கு திருமணாமாக இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அவளை கொன்ற கொலையாளிகள் யாரென்று தெளிவாக தெரிந்தும் இன்னும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் மகள் உயிரிழக்கும் தருவாயில், தன்னைத் தாக்கியவர்கள் யாரென்று தெளிவாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். “அவளைக் கொலை செய்து விடுவதாக மிரட்டி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர்” இவ்வாறு அவரது தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்..!

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரும், அவரது உறவினர்களும் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் ஆர்பாட்டத்தில் ஈட்டுபட்டனர்..!

வைசாலி மாவட்டத்தில் தேசரி காவல் நிலையத்தின் கீழ் சந்த்புரம் கிராமத்தில் இக்கொடூரச் சம்பவம் நடந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..!

ஹத்ராஸ் வழக்கு போல இங்குள்ள உள்ளூர் போலீசாருக்கும் தொடர்பு இருப்பதுபோன்று, வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். மருத்துவமனையில் வழங்கிய வாக்குமூலம் வீடியோ வைரலாகி நான்கு நாட்களுக்குப் பிறகே, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை..!