உபி யோகி அரசு பெண்களுக்கு பதிலாக குற்றவாளிகளை பாதுகாக்கிறது -ராகுல் காந்தி

0
47

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்ணை துன்புறுத்திய குற்றவாளி போலீஸ் காவலில் இருந்த நிலையில், அவரை, பாஜக எம்.எல்.ஏ.வும், அவரது மகனும் சோ்ந்து காவல்துறையிடமிருந்து காப்பாற்றியதாக தகவல் வெளியாகியது..!

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.பி. ராகுல் காந்தி, உத்தர பிரதேச அரசு பெண்களை பாதுகாப்பதை தவிா்த்து, குற்றவாளிகளை பாதுகாத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்..!

இது தொடர்பாக ராகுல் காந்தி சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது : உத்தர பிரதேச அரசு பெண்களை பாதுகாப்போம் என கூறியது. ஆனால் தற்போது குற்றவாளியை பாதுகாக்கும் நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்..!

இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளார் பிரியங்கா காந்தி கட்டுரையில் வெளியிட்ட பதிவில், பாஜக எம்.எல்.ஏ.வும் அவரது மகனும் செய்த இந்த செயல் பாலியல் துன்புறுத்தலில் இருந்து மகள்களை காப்பற்றவா இல்லை குற்றவாளிகளை காப்பற்றவா என்பதை மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் விளக்க வேண்டும் என்றாா்..!