உ.பி-யில் துப்பாக்கிச்சூடு: கைதான பாஜக நிர்வாகிக்கு நீதிமன்ற காவல்

0
30

உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்..!

பாலியா மாவட்டத்தில் உள்ள துர்ஜன்பூர் கிராமத்திற்கு கடை ஒதுக்கீடு செய்வதற்காக சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. துணை மாஜிஸ்திரேட் தலைமையில், காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுய உதவி குழுவினருக்கு இடையே மோதல் உருவானது..! அப்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி தீரேந்திர பிரதாப் சிங், கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்..! இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் பல்காமா உயிரிழந்தார்..!

காவல்துறை முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்றதை அடுத்து 3 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 9 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்..! இதற்கிடையே தலைமறைவாக இருந்த தீரேந்திர பிரதாப், காவல்தூறையினரால் இரண்டு தினங்களுக்கு முன் கைது செய்தனர்..!

இதையடுத்து நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (நேற்று) ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்..! தீரேந்திர பிரதாப்பிடம் நடத்திய விசாரணையில், கூட்டத்தில் நடைபெற்ற மோதலால் தற்காப்புக்கு துப்பாக்கியால் சுட்டதாக தீரேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்..!

இந்நிலையில் தீரேந்திர பிரதாப்புக்கு பைரியா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!