விளம்பரத்தில் கூட இந்து முஸ்லிம் பிணைப்பு கூடாதாம் நகைக்கடை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்

0
736

தனிஷ்க் நகைக் கடை மீது

மதவெறிக் கூட்டம் தாக்குதல்….

விளம்பரத்தில் கூட இந்து – முஸ்லிம் பிணைப்பு கூடாதாம்…

காந்திநகர்
‘தனிஷ்க்’ ஜூவல்லரியின் தொலைக்காட்சி விளம்பரம், ‘லவ் ஜிகாத்’தை ஊக்கப்படுத்துவதாக கூறி, குஜராத்திலுள்ள அந்த நிறுவனத்தின் கிளைக்குள் மதவெறியர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தனிஷ்க் (Tanishq) ஜுவல்லரி, டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் நகை விற்பனை பிரிவாகும்.

இதற்கு நாடு முழுவதும் பலகிளைகள் உள்ளன. இந்நிலையில், நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலம் நெருங்குவதையொட்டி, தனிஷ்க் ஜூவல்லரி விளம்பரம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது.

43 விநாடிகள் ஓடக்கூடிய இந்தவிளம்பரம், ‘ஏகத்வம்’ (ஒற்றுமை) என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.அதாவது, இந்துக் குடும்பத்திலிருந்து வந்த தனது மருமகளுக்கு இஸ்லாமிய மாமியார் ஒருவர்நகைகளை எல்லாம் போட்டு வளைகாப்பு நடத்துகிறார்.

அப்போது, மருமகள் தனது மாமியாரிடம், ‘அம்மா உங்க வீட்டில் இது பழக்கமில்லையே’ என்று கேட்கிறார். அதற்கு மாமியார், ‘மகள்களை சந்தோஷமா வச்சிக்கிறது எல்லா வீட்டிலும் பழக் கம்தானே..!’ என்று பதில் சொல்கிறார்.

ஹிந்தி மொழியில் இந்த விளம்பரம் வெளியாகியிருந்தது.

இந்த விளம்பரத்திற்குத்தான், திருமணம் மூலமான மதமாற்றத்தை (லவ் ஜிகாத்) ஊக்கப்படுத்துவதாக கூறி மதவெறி கூட்டத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜக ஆதரவு நடிகையான கங்கனா ரணாவத்“இது ‘லவ் ஜிஹாத்’ மட்டுமல்ல, பாலியல் உணர்வையும் ஊக்குவிக்கிறது” என்று திரியைக் கொளுத்திப்போடவே, ‘தனிஷ்க் நிறுவனத்தை புறக்கணிப்போம்’என்று டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ‘Boycott Tanishq’ என்ற ஹேஷ்டேக்குகளும் டிரெண்ட் செய்யப்பட்டன.

இதனிடையே, குஜராத்தின் காந்தி கிராம் பகுதியிலுள்ள தனிஷ்க் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மதவெறிக் கும்பல் ஒன்று, அங்கிருந்த மேலாளரை மிரட்டி அவரிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கியுள்ளது.

மதவெறிக் கூட்டத்தின் இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத, தனிஷ்க் நிறுவனம் யுடியூப்-பிலிருந்துதனது விளம்பரத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

கூடவே விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது.“இந்த சவாலான நேரத்தில் பல்வேறு தரப்பு மக்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து நிற்கும் ஒற்றுமையின் அழகைக்கொண்டாடுவது மட்டுமே ‘ஏகத்வம்’ என்ற விளம்பரபின்னணியின் நோக்கம்.

ஆனால் இந்த வீடியோ அதன் குறிக்கோளுக்கு மாறாக, மாறுபட்ட மற்றும் கடுமையான எதிர்வினைகளைக் கொண்டு வந்துள்ளது.

இதற்காக நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம். எங்கள் ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் கடை ஊழியர்களின் நலனை மனதில் வைத்து இந்த வீடியோவை திரும்பப் பெறுகிறோம்” என்று அந்த விளக்கத்தில் கூறியுள்ளது.