சர்வதேச அளவிலான பட்டினி தேசப்பட்டியலில் 94 ஆவது இடத்தில் இந்தியா

0
526

சர்வதேச அளவிலான பட்டினி தேசப்பட்டியலில் 94 ஆவது இடத்தில் இந்தியா! – அண்டை நாடான பாகிஸ்தான், வங்கதேசத்தவிட உணவில்லாமல் வாடுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என அறிக்கை!!!.132 நாடுகளில் வாழுபவர்களில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கையை கணக்கெடுத்த ’’வெத்தங்கர்ஹில்ஃப் மற்றும் சன்சர்ன் வேல்ர்ட்வைட் ’’ நிறுவனம் 107 நாடுகள் இடம்பெற்றிருக்கும் சர்வதேச பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியா 94 ஆவது இடத்தை பிடித்துள்ளது என்பது ஆளும் ஆட்சியாளர்களின் நிர்வாக திறனின்மையினை பறைச்சாற்றுகின்றது.

இதுவே கடந்த ஆண்டு 102 இடத்திலிருந்து தற்போது 94ஆவது இடத்திற்கு நகர்ந்தாலும் , ஆசிய நாடுகளில் தவிர்க்க முடியாத நிலையில் உள்ள இந்தியா தன் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளைவிடவும் பின் தங்கியிருப்பது என்பது ஒரு நாடு தன்னுடைய வளர்ச்சியினை எந்த விடயத்திலும் மையப்படுத்தாமல் மத அரசியலை முன்னிலைபடுத்துமேயானால் அங்கே வறுமை, வேலைவாய்ப்பின்மை , பொருளாதார சிக்கல்கள் போன்றவை நிகழும். அந்தவகையில் தான் ஆளும் பாஜக அரசின் தவறான சித்தாந்தபிறழ்தலினால் இந்தியாவிற்கு இந்நிலை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

உலகளவில் ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள மக்கள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

’’வெத்தங்கர்ஹில்ஃப் மற்றும் சன்சர்ன் வேல்ர்ட்வைட் ’’ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி இந்தியாவில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை விகிதம் என்பது 27.2 சதவிகிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதன்படி இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடியாகவும் அதில் 27.2 சதவிகிதம் என்பது 35.36கோடி மக்கள் பசியுடனே நாட்களை கடத்துகின்றனர் என்பது சாதாரணமாக கடந்துபோகும் செய்தியல்ல!!