TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடவங்குடி கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது

0
58

05/09/2020 TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் (அடவங்குடி) கிளை சார்பாக இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடவங்குடி கிளை சார்பாக கொரானா பேரிடர் காலத்தில் இரத்த பற்றாக்குறையை சரி செய்யும் விதத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று 05/09/20 சனிக்கிழமை காலை 10 மணி முதல் அடவங்குடி கொண்டையனிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை தலைவர் முகமது யாசர் தலைமையில் நடைபெற்றது


கொரானா பேரிடர் காலத்தில் இரத்தப் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இரத்ததான முகாம்களை நடத்தி கொண்டு வருகிறது,கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தமிழகம் முழுவதும் சுமார் மட்டும் 133 இரத்த தான முகாம்கள் மூலமாகவும் அவசர இரத்த தான சேவைகள் மூலமாகவும்,சுமார் 7,000 யூனிட்டுக்கு அதிகமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதன் ஒரு பகுதியாக திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடவங்குடி கிளை* சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாமில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இறுதியாக 39 (முப்பத்து ஒன்பது) நபர்கள் குருதிக்கொடை அளித்தனர்.


இம்முகாமில் அடவங்குடி கிளை தலைவர் முகமதுயாசிர்,
செயலாளர் யாசர் அராபத்,
பொருளாளர் சலாவுதீன்,
துணை தலைவர் நிசார்,மாவட்ட துணை செயலாளர் இஸ்மத், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஹாஜா அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும், சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், துணை தலைவர் தர்வீஸ், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் காயத்ரி, செவிலியர்கள் சாந்தி,கவிதா மற்றும் ஆய்வக பொறுப்பாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.