74-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொரோனாபேரிடர் கால இரத்ததான முகாம்

0
29

74-வது இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கொரோனா பேரிடர் கால இரத்ததான முகாம்

கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் மக்களின் உயிர் காக்கும் வகையில் இரத்ததான முகாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்
மயிலாடுதுறை மாவட்டம் இலுப்பூர் சங்கரன்பந்தல் கிளையும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கியும் இணைந்து சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
97-வது முகாமை மாவட்ட செயலாளர் M.பஹ்ருதீன் துவக்கிவைத்தார்.
மாவட்ட மருத்துவ அணிசெயலாளர் ரியாஸ் ஹமீத் மற்றும் இலுப்பூர், சங்கரன்பந்தல் கிளை நிர்வாகிகள்
அப்துர்ரஹ்மான், தமீமுல் அன்சாரி, மொஹ்சின், அப்துல் பாசித்
முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் ஆண்களும், பெண்களும்இதில் 40-ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்வமுடன் குருதிக்கொடை வழங்கினார்கள்.

மேலும், இம்முகாமில் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் B.சலிம் மற்றும் மருத்துவ குழுவினர்களும், காவல்துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் A.பஹ்ரூதின், ஜெகபர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.