மாணவர்களின் குரலை கேளுங்க : மத்திய அரசுக்கு ராகுல் அறிவுரை

0
48

மாணவர்களின் குரலை கேளுங்க: மத்திய அரசுக்கு ராகுல் அறிவுரை

புதுடில்லி: நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அந்த தேர்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு விவகாரத்தில், மாணவர்களின் குரலை, இந்திய அரசு கட்டாயம் கேட்டு, அனைவராலும் ஏற்கக்கூடிய முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.