வீர வசனம் பேசிய எஸ்.வி.சேகர், முன் ஜாமின் கோரி மனு தாக்கல்

0
36

பா.ஜ.க., உறுப்பினர் S V சேகர் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்..!


தற்சமயம் பா.ஜ.க.,வில் இருக்கும் S V சேகர் கூட்டணி கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். தங்கள் கட்சி கொடியில் இருக்கும் அண்ணா படத்தை நீக்க வேண்டும் என்று கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த முதல்வர், எதையாவது பேசுவதும், வழக்கு போட்டால் ஓடி ஒளிவதும் எஸ்.வி.சேகருக்கு வழக்கமானது என கிண்டலடித்தார்.


அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், சிறைக்குச் செல்ல வேண்டும் என்று அவருக்கு நீண்ட நாள் ஆசை, அரசு அதை நிறைவேற்றும் என்றார். இதற்கு பதிலளித்து அவர் போட்ட ஒரு வீடியோவில் முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விட்டார். மேலும் தேசியக் கொடியிலுள்ள காவி வண்ணத்தை, பா.ஜ.கவின் காவி வண்ணத்துடன் ஒப்பிட்டிருந்தார். இதனால் தேசிய கொடி அவதிப்பு சட்டம் அவர் மீது பாய்ந்தது.


மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் பயந்து போன எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரியுள்ளார்.