74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 3000 யூனிட் இரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மனிதநேய சேவை

0
155

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் வழிக்காட்டுதலின் படி ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் தமிழகத்திலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் கொரோனா பேரிடர் கால இரத்ததான முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்..!


அதுமட்டுமின்றி நேற்று ஆகஸ்ட் 15-ஆம் தேதி சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு இரத்ததான முகாம்கள் நடத்தினர் . இந்த முகாம்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு 3000 யூனிட் குருதிக்கொடை அளித்துள்ளனர்..!
இதன் ஒருகட்டமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் பூதமங்கலம் கிளை சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை அளித்தனர்..!

இந்த முகாமில் பூதமங்கலம் கிளை செயலாளர் முஹமது பராஜ் பொருளாளர் ஷாகுல் ஹமீத், கூத்தாநல்லூர் நகர தலைவர் அபுபஸ்லான் பொதக்குடி கிளை தலைவர் ரஹ்மத்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் அப்துல் காதர் , மாவட்ட துணை செயலாளர் அப்துல் மாலிக் , மாவட்ட துணை தலைவர் பீர் முகமது , மாவட்ட பொருளாளர் முகமது சலீம் , மாவட்ட மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் ஹாஜா அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..!