எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்”.. ஜெயக்குமார் அதிரடி!

0
58

சென்னை: “ஒன்னும் பிரச்சனை இல்லை.. எஸ்வி சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசைப்பட்டால் அதிமுக அவரது ஆசையை அதிமுக நிறைவேற்றும்” என்று அமைச்சர் ஜெயக்குமார் ஒரு மறைமுக வார்னிங் விடுத்துள்ளார்.


எஸ்வி சேகரை பொறுத்தவரை தீவிரமான பாஜக ஆதரவாளர்.. குறிப்பாக பிரதமர் மோடி மீது அபரிமிதமான நம்பிக்கையை, பாசத்தை வைத்திருப்பவர்.. அசைக்க முடியாத தலைவர் மோடிதான் என்பதை பல தருணங்களில் எஸ்வி சேகர் வெளிப்படுத்தியும் வருகிறார்.
இந்நிலையில், இவர் சில தினங்களுக்கு முன்பு அதிமுக பற்றி ஒரு கருத்து சொல்லி இருந்தார்.. அதாவது அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கட்சியின் பெயரையும், கொடியையும் மாற்ற வேண்டும் என்றார். இதை பார்த்து அதிமுகவினர் கொந்தளித்துவிட்டனர்.ஜெயக்குமார்
இதற்கு முதல் நபராக வந்து கண்டனம் சொன்னது அமைச்சர் ஜெயக்குமார்தான்.. அதேபோல முதல்வரும், ‘எஸ்விசேகர் ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார்’ என்றார்.. அமைச்சர் காமராஜோ, பிஜேபி கட்சி எஸ்விசேகரை ஒரு பொருட்டாகவே ஏற்று கொள்வதாக தெரியவில்லை.. அதனால நாமும் அவர் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது என்றார்.பிரதமர் மோடி
இப்படி ஒட்டுமொத்த அதிமுகவும் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எஸ் வி சேகர் திரும்பவும் ஒரு வீடியோ போட்டார்.. அதில், ‘என்னை எல்லோருமே சொல்வாங்க, நீ ஒரு பிராமண சத்திரியன் என்று… ஆனால், ஜான் பாண்டியனில் இருந்து எல்லோருமே எனக்கு நண்பர்கள்தான்.. பிரதமர் மோடிக்கு என்னை பற்றி நன்றாக தெரியும்.பயம் கிடையாது
போனில் நான் சொன்னாலே போதும், 5 ஆயிரம் ஓட்டு மாறும்.. அந்த அளவுக்கு எனக்கு செல்வாக்கு இருக்கு.. ஆனா எங்க பேசனுமா அங்க பேசுவேன்.. நான் மட்டும் பயந்திருந்தா இப்படி பொதுவாழ்க்கைக்கு வர முடியாது’ என்பது உட்பட தாறுமாறாக பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த பதில்களை எஸ்வி சேகர் எல்லாம் யாருக்கு சொல்கிறார், எதை தெரியப்படுத்துகிறார் என விளங்கவில்லை.ஜெயில்
இருந்தாலும், மறுபடியும் ஜெயக்குமார் எஸ்வி சேகர் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசும் போது, எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படியே அதிமுகவை அவமதிப்பதையும் ஏற்க முடியாது.. அவர் நீண்ட காலமாக ஜெயிலுக்கு போக ஆசைப்படுகிறார்… அவரது ஆசையை அதிமுக நிறைவேற்றும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியல் செய்திகள்பால் பாக்கெட்
ஏற்கனவே எஸ்வி சேகர் கைதாக வேண்டியவர்.. ஏன் கைதாகவில்லை என்பதற்கு இப்போது வரை நமக்கு விடையே தெரியவில்லை.. தற்போது முதல்வர் குறித்து எஸ்வி சேகர் அவதூறாக பேசியதாக சென்னை குற்றவியல் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.. மேலும் ஜெயக்குமாரும் இப்படி வார்னிங் தந்துவிட்டதால், இனி எஸ்வி சேகர் பேச்சு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அந்த பால் பாக்கெட் விவகாரத்துக்கு முக்கியத்துவம் தராமல் இருந்திருக்கலாம்.