திருப்பதி கோயில் ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா

0
16

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அதில் 402 பேர் குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டதாகவும், 338 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று ஊழியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாதம்தோறும் நடைபெறும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்குகொண்டபோது அவர் இந்த தகவல்களைத் தெரிவித்தார்.

மேலும் மாநில மற்றும் மத்திய அரசுகள் வகுத்துள்ள கோவிட் 19 தொற்றுக்கான வழிமுறைகளின்படியே ஜுன் 11ஆம் தேதி தேவஸ்தானம் திறக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், “முதலில் தேவஸ்தான போர்டின் நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டினர், பின் திருப்பதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபின், சில ஊடகங்கள், சமூக ஊடகங்கள், சில தனிநபர்கள் நாங்கள் பணத்திற்காக கோயிலை திறந்தோம் என்கின்றனர்,”


“கொரோனா தொற்று திருப்பதியில் மட்டும் அதிகரிக்கவில்லை. நாடும் முழுவதும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கஜானாவை நிரப்புவதற்காகதான் தேவஸ்தானம் திறக்கப்பட்டது என முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே திறக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் திருமலை தேவஸ்தான ஊழியர்கள் 743 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், கோயிலை திறந்து வைத்துள்ளனர் என பலர் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.


அத்துடன் தப்லீக் ஜமாத்தில் பங்கேற்றவர்களை ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் எப்படி விமர்சித்தார்கள், திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு தொற்று என்பதை எப்படி கையாள்கிறார்கள் என்பதையும் அவர்கள் ஒப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். #TirupatiVirus என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

https://twitter.com/imMAK02/status/1292886212777107456?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1292886212777107456%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.bbc.com%2Ftamil%2Findia-53732922