மத்திய அரசின் வெண்டிலேட்டர் ஊழலுக்கு ஆதாரம் சிக்கியது – மே17 இயக்கம்

0
23

மோடி அரசின் மெகா வெண்டிலேட்டர் ஊழலுக்கு மேலும் ஓர் ஆதாரம் சிக்கியது என மே17 குற்றச்சாட்டு

இந்தியா நேபாளத்திற்கு 28மில்லியன் மதிப்புள்ள 10வெண்டிலேட்டர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 09.08.20 அன்று கொடுத்திருக்கிறது. 28மில்லியனென்றால் 2.8கோடி. 10 வெண்டிலேட்டர்களின் விலை 2.8கோடி என்றால் ஒரு வெண்டிலேட்டரின் விலை 28லட்சம். ஆனால் இந்தியாவில் பிரதமர் மோடி பிம்.எம் கேர் நிதியிலிருந்து வாங்கிய ஒரு வெண்டிலேட்டரின் விலை 4லட்சம்.

இப்படியாக 4லட்சம் பெறுமான வெண்டிலேட்டர்களை 24லட்சம் கூடுதலாக ஏன் மத்திய அரசு வாங்கியது.? ஏற்கனவே பி.எம்.கேரில் நடந்த ஊழல் குறித்து விரிவாக இரண்டு பதிவுக்கு முன்னால் எழுதியிருக்கின்றோம் படிக்க

முந்தைய பதிவை படிக்க கிளிக் செய்யவும்

இப்படியான ஊழல்களை எல்லாம் யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மோடி அரசு ஏற்கனவே இருக்கிற பேரிடர் வங்கி கணக்கு இல்லாமல் பிரதமர் வங்கி கணக்கு என்ற ஒன்றை புதிதாக உருவாக்கி அதை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்றும் மாற்றியிருக்கிறார்கள் என மே17 இயக்கம் குற்றம் சாட்டியுள்ளார்கள்

Thanks Republic world