முருகனை அவமதித்ததாக பாஜக நாராயணன் மீது குற்றச்சாட்டு

0
82

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டங்களையும் அவர்களுக்கு பின்னணியில் உதவிய தேச விரோத சக்திகளுக்கும் முடிவுகட்ட கடந்த 9-ம் தேதி மாலை சரியாக 06.01 மணி அளவில் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சொந்தங்கள், தங்கள் வீடுகளில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் முழங்கி வெற்றி வேல் முருகனுக்கு பூஜை செய்ய உள்ளதாக தமிழ்நாடு பாஜக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது..!

அதைத்தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் முருகனின் வேலை பூஜை செய்து அந்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்..! இது தற்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. முருகன் படம், வேலை பூஜை அறைக்குள் சேர்காமல் வாசலில் வைத்து பூஜை செய்ததாக சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர்..!

இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த நாராயணன் முருகன் வேலுக்கு பதில் ஒட்டடை குச்சியில் அட்டையை ஒட்ட வைத்து பேனரில் அச்சிடப்பட்டு முருகன் படத்தை வைத்து பூஜை செய்ததாக அவர் வெளியிட்ட படத்தை வைத்து முருக பக்தர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்..!

கறுப்பர் கூட்டம் எந்த அளவுக்கு முருகனை அவமதித்தார்களோ அதே அளவுக்கு நாராயணனும் அவமதித்துவிட்டு விட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்..!