அப்பளம் சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என்று சொன்ன மத்திய இணை அமைச்சருக்கு கொரோனா தொற்று !!

0
30

உலக நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம்.
இதனை பயன்படுத்தி பலரும் விதவிதமான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே மத்திய நீர்வளம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அப்பளம் ஒன்றிற்கு விளம்பரம் செய்து வீடியோ வெளியிட்டார்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸை விரட்டும் பண்பு இந்த அப்பளத்துக்கு உள்ளதாக கூறியிருந்தார். மேலும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், அப்பள உற்பத்தியாளர் ஒருவர் ‘ பாபிஜி ‘ என்ற இந்த அப்பளத்தை தயார் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்