இந்தியா

Google Pay பயனர்கள் உஷார்! ஒரு லட்ச ரூபாய் ஆன்லைன் மோசடி – இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!

கூகிள் பே பயனர்கள் உஷார், பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் தனது நண்பருக்கு ரூ.300 தொகையை அனுப்ப முயன்று ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி, அவர் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்தை இழந்துள்ளார். இவர் எப்படி ஒரு லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இவர் செய்த தவறை நீங்களும் செய்யாமல் பாதுகாப்பாக இருங்கள்.

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்ததும், தனியார் நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து பல சலுகைகளுடன் வங்கி பரிவர்த்தனைகளை மொபைல் ஆப்ஸ் மூலம் செய்யத் துவங்கியது. இருந்த இடத்திலிருந்து வெகு எளிதாக சில நொடிகளில் பணப் பரிமாற்றத்தை இந்த மொபைல் பயன்பாடுகள் செய்துமுடித்தது. இதில் முன்னோடியாகத் திகழ்ந்த மொபைல் ஆப்ஸ் தான் கூகிள் நிறுவனத்தின் கூகிள் பே பயன்பாடு.

பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், ஆன்லைன் மோசடி மூலம் ரூபாய் ஒரு லட்சத்தை இழந்துள்ளார். இவர் தனது நண்பரின் கூகுள் பே எண்ணிற்கு ரூ.300 தொகையை அனுப்பியுள்ளார். ஆனால், இவர் செய்த பரிவர்த்தனை தோல்வியுற்றது, அந்த தொகை அவரின் நண்பருக்குச் சென்று சேரவில்லை. இதனால் அந்த நபர் இணையத்திலிருந்து கூகுள் பே வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை சர்ச் செய்து போன் செய்திருக்கிறார்.

கூகிள் பே சேவை மைய அதிகாரி என்று கூறி எதிர்முனையில் பேசிய மர்ம கும்பல், பணத்தைத் திரும்ப அனுப்ப வங்கிக் கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்பும்படி அவரிடம் தெரிவித்துள்ளது. இவரும் அவர்களின் பேச்சை நம்பி தனது வங்கி விவரங்களை சேவை மைய அதிகாரி போல் பேசிய நபரிடம் கொடுத்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என்று அதிகாரி தெரிவித்துவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்கிறார்.

அழைப்பு துண்டிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், புகார் கொடுத்த நபரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் திருடப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் தான், அந்த நபருக்குத் தான் கூகிளில் தேடி பிடித்த எண் போலியான மோசடி கும்பலின் எண் என்பது புரியவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த நபர் உடனடியாக சைபர் கிரைம் போலிஸாரிடம் புகாரளித்துள்ளார். எப்பொழுதும் வங்கி தொடர்பான சேவை மைய எண்களைக் கூகிள் தளத்தில் சர்ச் செய்யாதீர்கள்.

Related Articles

Back to top button