BP செக் பன்ன விரல் ரேகை வைத்த நபர், வங்கி கணக்கை வழித்து எடுத்த ஹேக்கர்கள்

0
32

BP செக் பன்ன விரல் ரேகை வைத்த நபர் வங்கி கணக்கை வழித்து எடுத்த ஹேக்கர்கள்



இன்றைய டிஜிட்டல் யுகத்தில் காலை எழுந்தவுடன் பல் துலக்க பயன்படும் பசை தொடங்கி இரவு தூங்க வைக்கும் கொசு வத்தி வரை அனைத்தும் ஆன்லைன் ஆகிவிட்டது. இந்த ஆன்லைனில் மக்களுக்கு நிகராக அவர்களிடம் மோசடி செய்து சம்பாதிக்கும் கும்பலும் ஆன்லைனில் முகாமிட்டு விடுகிறது. அந்த வகையில் தான் கொரோனா காலத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது.



ஆக்சிஜன், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவை சோதிக்க எந்த கருவியும் வேண்டாம், இந்த ஆண்டிராய்டு அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்தால் போதும் என விளம்பரங்கள் வருவதை காண முடிகிறது. அப்படி வரும் விளம்பரம் ஒன்றை பார்த்து BLOOD PRESSURE CHECKER என்ற ஆப்பை ஒருவர் பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் தனது கைரேகையை பதிவு செய்தவுடன் அவரது வங்கிக்கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் ஹேக்கர்கள் வழித்து எடுத்துவிட்டனர்.



இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், “உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தி உங்கள் ஆக்ஸிஜன் சர்க்கரை அல்லது பிபி அளவை சரிபார்க்கக் கூறும் எந்தவொரு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவர்கள் உங்கள் கட்டைவிரல் அல்லது விரல்களை வைத்து அதை நகலெடுக்கும்படி கேட்கிறார்கள், அவை உங்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளதால், அதை குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்.” என்று தெரிவித்துள்ளனர்.