அரசியல் செய்திகள்தமிழ்நாடுபாஜக - BJP

பெரியார் சிலைக்கு காவி பூசியவனுக்கு பாஜக ரூ.50,000 நிதி உதவி.!

கோவையில் பெரியார் சிலைக்கு காவி பூசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்டுத்தியது. அடுத்ததாக திருவள்ளுவர் பாண்டிச்சேரியில் எம்ஜிஆர் கன்னியாகுமரியில் பேரறிஞர் அண்ணாசிலை என அனைத்துக்கும் காவி துணிகள் அணியப்பட்ட விவகாரம் திராவிடக்கட்சிகளிடையே சலசலப்பையும் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு சென்றது.

கோவையைச் சேர்ந்த அருண் பெரியார் சிலைக்கு காவி பூசிய வழக்கில் சரண்டர் ஆனார். இதை ஊக்குவிக்கும் விதமாக அவரது குடும்பத்திற்கு பாஜக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. இந்த தகவலை இந்த அணியின் தலைவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button