தேசிய பசுமைப் படை சார்பில் பள்ளிகளில் 50 மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம்

0
13

தேசிய பசுமைப் படை சார்பில் பள்ளிகளில் 50 மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம்

பள்ளிகளில் 50 மரக்கன்றுகள் வளர்த்தல் என்னும் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கல்வி மாவட்டங்களில் தேர்வுசெய்யப்பட்ட 15 பள்ளிக்கூடங்களுக்கு இரண்டாம்கட்ட நிதியாக ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், குத்தாலம்
அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமசிவம், மூவலூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன், நீடூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசப்பெருமாள் உள்ளிட்ட 15 பள்ளிகளுக்கான
தேசிய பசுமைப்படையின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். மேலையூர் சீனிவாசாமேல் நிலைப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்
துரை நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
செல்வக்குமார் செய்திருந்தார்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.