ஆன்லைன் ரம்மியால் கடன் தொல்லை : திருச்சியில்
காவலர் தூக்கிட்டு மரணம்

0
11

ஆன்லைன் ரம்மியால் கடன் தொல்லை…
காவலர் தூக்கிட்டு மரணம்..!

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலையம், வாத்தலை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் ஆனந்த்( வயது 26 )..!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா திருப்பராய்த்துறை அனலை பெரியார் நகரைச் சேர்ந்தவர் இவர்..!

ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வமான ஆனந்த், அதற்காக தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடம் அவ்வப்போது கடன் வழங்குவது வழக்கம். அவ்வாறு வாங்கிய கடனை திரும்பி கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது..!

இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பணி முடித்து வீட்டுக்கு சென்றவர். இரவு 11 மணிக்கு மேல் தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மாட்டுக் கொட்டகையில் தனது அம்மாவின் சேலையால் தூக்கு மாட்டி இறந்துள்ளார்..!

இன்று அதிகாலை மூன்று மணிக்கு மாட்டு கொட்டகைக்கு சென்ற கோவிந்தராஜ் தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து விட்டு காவல்நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளார்..!

இவரின் பிரேதம் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்..!

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து தற்கொலைகள் நடந்து வருகிறது, இதனை அரசு கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமா.?