அயோத்தியின் பாபர் மசூதிக்கு அடிக்கல்நாட்ட செல்ல மாட்டேன் – உ.பி முதல்வர் பேச்சு

0
17

அயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட தன்னை அழைக்க மாட்டார்கள் எனவும், அங்கு தான் செல்லவும் மாட்டேன் என்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நேற்று ராமர் கோயில் பூமி பூஜை விழாவிற்கு வந்தவரிடம் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இக்கருத்தை தெரிவித்தார்..!


உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பில் ராமர் கோயிலை இடித்து தான் பாபர் மசூதி கட்ட வில்லை எனவும் அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் அறிக்கையில் கூறியிருந்தது, நம்பிக்கையின் அடிப்படையிலே இந்த இடத்தை ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருந்தது..!

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்காக நேற்று நடைபெற்ற பூமி பூஜை விழாவில் கலந்துகொள்ள உபி முதல்வர் யோகி வந்திருந்தார்..!

விழா முடிந்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது முதல்வர் யோகியிடம் ராமர் கோயிலை போல், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கட்டப்படவிருக்கும் புதிய மசூதி மீது கேள்வி எழுப்பப்பட்டது..!


அதில், ’உபி முதல்வராக ராமர் கோயிலின் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டது போல், மசூதிக்கும் செல்வீர்களா?’ என முதல்வர் யோகியிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் தயங்காமல் பதில் அளித்திருந்தார்.
அப்போது உபி முதல்வர் யோகி கூறும்போது, ‘எனது பணியை நான் எப்போதும் செய்து கொண்டிருப்பேன். மசூதியின் அடிக்கல்நாட்டு விழாவிற்கு என்னை எவரும் அழைக்க மாட்டார்கள், நான் அதற்கு செல்லவும் மாட்டேன்.’ எனத் தெரிவித்தார்..!


முதல்வர் யோகியின் கருத்துக்கு நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.! என்னவென்றால்

அயோத்தியில் மசூதி கட்ட உலகில் உள்ள அனைத்து இந்து சகோதரர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்படும்
ஆனால் உங்களையோ உங்களைச் சார்ந்தவர்களுக்கோ அழைப்பு கொடுக்க மாட்டார்கள் என நெட்டிசன்கள் பதில் அழித்து வருகின்றனர்..!