விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சகோதரி கு.பானுமதிக்கு மயிலாடுதுறை மாவட்டம் ஆயப்பாடி வீதியில் விசிக ஆயப்பாடி முஜிபூர் ரகுமான் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

0
15

தொல்.
திருமாவளவன் சகோதரிக்கு விசிக சார்பில் அஞ்சலி

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் ஆயப்பாடியில் விசிக இஸ்லாமிய சனநாயக பேரவை மாநிலத்துணைச் செயலாளர் ஆயப்பாடி முஜிபூர் ரஹ்மான் தலைமையில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன் சகோதரி மறைந்த பானுமதிக்கு வீர வணக்கமும், 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதில் செம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பால்ராஜ், செம்பை ஒன்றிய பொறுப்பாளர் யோ.ஸ்டாலின், சமூக ஊடக மையம் மாவட்ட துணைச் செயலாளர் சங்கை நவீத், செம்பை ஒன்றிய திமுக செயலாளர் அப்துல் மாலிக், ஆயப்பாடி முகாம் பொறுப்பாளர் சிறுத்தை அமீன்,பனங்குடி சைமன் , வேலம்புதுக்குடி நியூட்டன்,ஆரிப் பாய், சங்கை சதக்கத்துல்லா, அ.அகஸ்டின் ,கோல்டு சர்புதீன், திருக்களாச்சேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆரிப் நிஷா ரபிக் மற்றும் விசிக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.