சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

0
20

சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலக திறப்பு விழா, நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட தலைவரும் தமிழக அனைத்து மாவட்டங்களின் சிறப்புப்படைத் தலைவருமான சேமசுப்பிரமணியன்,மாநில இணை செயலாளர் கந்தசாமி மற்றும் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். மண்டல செயலாளர் அசோக்குமார்,மாவட்ட செயலாளர் தனசேகரன், முதன்மைச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தர்மபுரி மாவட்ட தலைவரும், அனைத்து மாவட்டங்களின் சிறப்பு படைத்தலைவருமான சேமசுப்பிரமணியம் மற்றும் மாநில இணை செயலாளர் கந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தர்மபுரி மாவட்ட செயல் தலைவர் முனியம் சிவசண்முகம் மற்றும் தருமபுரி மாவட்ட தொழிலாளர் பிரிவு செயலாளர் துரை ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிராஜ் நன்றி உரையாற்றினார்.