முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அறவழி கண்டன ஆர்ப்பாட்டம்

0
13

முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி -எஸ்டிபிஐ கட்சி சார்பில் அறவழி கண்டன ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி,ஆக.5:பொறையாறில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொது செயலாளர் கண்டன ஆர்ப்பாட்டம் எம்.ஜெ.ரஃபி தலைமையில் நடைபெற்ற அறவழி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாபர் இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை தடுக்க வேண்டும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், முத்தலாக் தடை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், ஊரடங்கு பெயரால் நடக்கும் அத்துமீறல்களை நிறுத்த வேண்டும், பொருளாதாரப் பேரழிவை கொரானாவால் மறைக்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர்சபிக் அமது,நகர செயலாளர் ஜாகிர் உசேன்,செயலாளர் ஹசன் முகது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.