4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசலில் எஸ்.டி.பி.ஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்

0
15

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்!

பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இன்று (ஆக.05) நாடு தழுவிய அளவில் சமூக இடைவெளியுடன் அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

[embedyt]https://youtu.be/y12dPtaSOxA[/embedyt]



பாபரி மஸ்ஜிதை தகர்த்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்பது உலகளவில் இந்தியர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும் என்பதால், மத்திய அரசு ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியிறுத்தியும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி அங்கு நடக்கும் அத்துமீறலை நிறுத்த வேண்டும், இணையம் தொலைத்தொடர்பு தடையை நீக்க வேண்டும், சிறையிலடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், சிவில் பிரச்சினையை கிரிமினல் குற்றமாக்கி, முஸ்லிம் ஆண்களை சிறைப்படுத்தும் சிறுபான்மை மக்கள் விரோத முத்தலாக் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்காமல் நல்ல நிர்வாகத்தை வழங்கிட வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நாடு தழுவிய அளவில் இந்த அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.



அதன்படி குடவாசலில் Y. முபாரக் தலைமையில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் அப்துல் ராஜிக் SDPI கட்சி மாவட்ட செயலாளர், திருவாரூர் மாவட்டம் மற்றும் *ஜாஸ்மின்* PFI கூத்தாநல்லூர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முஹம்மது சுல்தான் தொகுதி தலைவர், இத்ரீஸ் குடவாசல் துனை தலைவர், வஜீர் அஹமது குடவாசல் செயலாளர், முஹமது பைசல் அபிவிருத்தீஸ்வரம் கிளை துனை செயலாளர், முஹமது இர்பான் அபிவிருத்தீஸ்வரம் ஒருகிணைப்பாளர், கமர்தீன் அடவங்குடி மற்றும் சாதிக் அலி அடவங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்டத்தின் திருவாரூர், கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை, கட்டிமேடு, இரவாஞ்சேரி, மன்னார்குடி ஆகிய இடங்களிலும் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.