தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0
11

காயல்பட்டிணத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

பாபரி இடத்தில் ராமர் கோவிலை கட்டுவதை நிறுத்தக் கோரியும்,
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டியும், அங்கு ஊரடங்கின் பெயரால் நடக்கும் அத்துமீறல்களை தடுக்க வேண்டியும்,
முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெறக்கோரியும்,
பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்காமல் நடவடிக்கை எடுக்கவும்,

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காயல்பட்டிணத்தில் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் செய்தியாளர் சுரேஷ்