தமுமுக வினர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு 100 மேற்பட்டோர் முற்றுகை ஆர்ப்பாட்டம்

0
10

திருச்சியில் பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை: தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்..

இது அடையாளப் போராட்டம் அல்ல… என் சமூகத்தின் மீது இழைக்கப்பட்ட அநீதிகளையும்,அத்துமீறல்களையும் இன்னொரு வலிமையான சமூகத்தின் தோள்களுக்கு கடத்துவதற்கான மீள் முயற்சி.

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்ற பிரதமரை கண்டித்து திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தில்லைநகர் கிளையினர் மற்றும் ரஹ்மானியபுரம் இளைஞரணி ஜமாத்தார்கள் சார்பாகவும் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

மத்திய அரசுக்கு எதிராக கோஷம் இடப்பட்டது.தில்லைநகர்கிளை தமுமுக சார்பாகவும், ரஹ்மானியபுரம் இளைஞர்அணி, ஜமாத்தார்கள் சார்பாகவும் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்….

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்…