அரசு மதுபான கடை சுவரில் துளையிட்டு ரூபாயா 93 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் திருட்டு

0
15

அரசு மதுபானக்கடை சுவற்றில் துளையிட்டு ரூ.93 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு 

தரங்கம்பாடி,ஆக.05;
மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் அருகே அப்பராஜாபுத்தூரில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை சுவற்றில்  துளையிட்டு ரூ.93 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

ஆக்கூர் அருகே அப்பராஜாபுத்தூர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கடந்த இரண்டு வருடமாக அரசு டாஸ்மாக் மதுபான கடை  இயங்கி வருகிறது. கடையில் மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மது விற்பனையை முடித்துக்கொண்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் ஊழியர்கள் விற்பனைக்காக மதுபானக்கடையை திறந்தபோது பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு மது பாட்டில்கள் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், டாஸ்மாக் மேலாளர் அசோகன் பொறையார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் தெரிவித்தார். அதன், அடிப்படையில் பொறையார் காவல் நிலைய ஆய்வாளர் செல்வம், சீர்காழி டி.எஸ்.பி. யுவராணி நேரில் சென்று டாஸ்மாக் மதுபானக்கடையை ஆய்வு மேற்கொண்டு மதுபாட்டிலில் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் டாஸ்மார்க் கடையில் சிசிடிவி இல்லாதது குறிப்பிடத்தக்கது.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.