தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் திடீர் மணல் திட்டுகளால் மீனவர்கள் மீன் பிடிப்பதில் தடை – தூண்டில் வளைவு அமைக்கவும் மணல் திட்டுகளை உடனடியாக அகற்றவும் மக்கள் கோரிக்கை.

0
12

திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் திடீர் மணல் திட்டுகளால் மீனவர்கள் மீன் பிடிப்பதில் தடை – தூண்டில் வளைவு அமைக்கவும் மணல் திட்டுகளை உடனடியாக அகற்றவும் மக்கள் கோரிக்கை

திருச்செந்தூர் அருகே அமைந்துள்ளது மணப்பாடு கிராமம். 4000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழும் இவ்வூர் இந்த கொரோனோ காலத்தில் சுய ஊரடங்கை கடைப்பிடிப்பதிலும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவத்திலும் முன் உதாரணமாக திகழ்ந்து புகழ் பெற்று வருகின்றது . 250 க்கும் மேற்பட்ட விசை படகுகளை கொண்டு மீன் பிடி தொழிலையே நம்பி வாழும் இம்மக்கள் கொரோனோ ஊரடங்கு காலத்தில் பல மன உளைச்சல்களுக்கு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

தற்போது இப்பகுதியில் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு வருவதால் திடிரென கடல் பகுதியில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது இத்திட்டுகள் தடையை ஏற்படுத்துகிறன . இதனால் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் கொரோனோ காலத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்க பட்டு வருகின்றனர். கடந்த 15 வருடமாக மண் அரிப்பை தடுத்து நிறுத்த தூண்டில் வளைவு அமைக்க அரசிடம் கோரிக்கை விடுத்து அரசும் ஒத்துக்கொண்ட நிலையில் அந்த திட்டம் கை விட பட்டது.

அதனால் இப்பகுதி மக்களே நிதி வசூல் செய்து 2 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தற்சமயம் மணலை அகற்றி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தூண்டில் வளைவு பாலம்அமைக்க கோரி மனு அளித்தனர். அரசு நிதி ஒதுக்கிடு செய்யாததால் அமைக்க முடியவில்லை என்று கூறியதை அடுத்து மணல் திட்டுகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தூண்டில் வளைவு பாலத்தை விரைவில் அமைக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கை நிறைவேற்ற படாமல் போனால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறிய நிலையில் தற்செயலாக மணப்பாட்டிற்கு வருகை தந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாரிடம் கிராம மக்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத தங்கள் நிலையை எடுத்துக்கூறி தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர், அதனை ஏற்றுக்கொண்டு விரைவில் தூண்டில் வளைவு பாலம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் கலந்து பேசி மீனவ மக்களுக்கு வாக்குறுதி தந்தார். அதன் பின்னர் மீனவ மக்கள் நம்பிக்கையுடன் அங்கிருந்து சென்றனர்.

திருச்செந்தூர் செய்தியாளர் சுதேஷ்