உரிமையாளர் மாஸ்க் அணியாததால் ஆட்டை கைது செய்த போலீஸார்

0
16

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் ஆடுகளை அழைத்துச்செல்லும்போது ஆட்டின் உரிமையாளர் ‘மாஸ்க்’ அணியாததால் ஆடுகளை கைது செய்து ஜீப்பில் ஏற்றிய போலீஸாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.


உலகம் முழுவதும் கொரோனா பரவுவதால் மாஸ்க் அணியவேண்டும் என்று சட்டம் அமலில் இருக்கிறது. நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர் மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கி கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துகொண்டிருக்கின்றன அரசுகள். இந்நிலையில், மாஸ்க் அணியாமல் ஆட்டை சாலையில் அழைத்து சென்றிருக்கிறார் ஒரு இளைஞர்.
இதனைப்பார்த்த போலீஸ், மாஸ்க் எங்கே? என்று கேட், அவரோ பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால், கோபமடைந்த போலீஸ் ஆட்டை பிடித்து காவல்துறை வேனில் ஏற்றியிருக்கிறது.

அந்தக்காட்சிதான், வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. மாஸ்க் அணியாததால் ஆடுகளை போலீசார் கைது செய்துவிட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. சில ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின.

இந்நிலையில், இதுகுறித்து, ஆடுகளை ஏற்றிச்சென்ற காவல்துறையிடம் பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டபோது, “ஒரு ஆடு பிரதான தெருவில் சுற்றித்திரிந்தது. உரிமையாளர் வந்து தன்னுடைய ஆடு எங்கே? என்று புகார் அளித்தால் என்ன பதில் சொல்வது என்பதால்தான் பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம்” என்று சமாளித்துள்ளார்கள். அதேபோல, போலீஸ் தரப்பில் ஆட்டின் உரிமையாளர் முகமது அலி வந்து வாங்கிசென்றுவிட்டார்” என்றும் கூறப்படுகிறது