தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பேருராட்சியின் முலமாக வழங்கப்படும் மார்கெட் நுழைவுசீட்டு முறைகேடு நடப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது இதனை உடனடி விசாராணை செய்ய
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் வலியுறுத்தல்

0
33

M.ஞானசேவியர்,
தென்காசி மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம்,

(28.7.2020)

உயர்திரு தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,

தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் சிறப்புநிலை பேருராட்சி
இங்குள்ள காய்கறி மார்கெட்டில் பேரூராட்சி சார்பில் விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் வாகன நுழைவுவரி வசூலிக்கப்படுகிறது,
அப்படி வசூலிக்கப்படும் தொகைக்கு கார்பன் காப்பி வைத்து எழுதாமல் வசூலிக்கும் பணியாளர் மோசடி செய்வதாகவும்,
மேலும் சில வியாபாரிகளிடம், விவசாயிகளிடமும் வாங்கும் பணத்திற்கு இரசீது எதுவும் வழங்குவதில்லை எனவும்,
இதுசம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்,
மேலும் இதுசம்பந்தமாக புகார் செய்பவர்களை சில பேரூராட்சி பணியாளர்கள் அச்சுறுத்துவதாகவும்,
இதனால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு இவர்களால் அவப்பெயர் உண்டாகிறது எனவும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது,
எனவே இவ்வாறு முறைகேட்டில் ஈடுபடும் வரிவசூல் செய்பவர் மீதும், பொதுமக்களை அச்சுறுத்தும் பேரூராட்சி பணியாளரை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுநலன் கருதி கேட்டுக் கொள்கிறோம்