கோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி

0
121

மோடி கடந்த முறை ஆட்சியின்போது 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.மோடியின் திட்டமிடப்படாத அறிவிப்பால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்..!


பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் 900 புதிய 2000 ரூபாய் நோட்டுகள் உட்பட ரூ.20.5 லட்சம் ரொக்கத்துடன் இருந்த பா.ஜ.க இளைஞர் பிரிவு தலைவரை தமிழக போலிஸார் கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு மாநில அளவிலான முக்கிய பதவியை வழங்கியுள்ளது..!


சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜே.வி.ஆர் அருண். இவர் பா.ஜ.கவின் மாவட்ட இளைஞர் பிரிவு செயலாளராக இருந்து வந்தார். மோடி பணமதிப்பிழப்பு அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு சேலம் அருகே ஒரு வழக்கமான சோதனையில் போலிஸார் ஈடுப்பட்டனர்..!


கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக முறையான ஆதாரம் எதுவும் சமர்பிக்கப்பட்டாததல் காவல்துறையினர் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு வருமான வரித்துறை விசாரணையில் செய்தது.
இதுகுறித்து விளக்கமளிக்க கோரி பாஜகவின் மாநில பிரிவு அருணுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது..!

இதுகுறித்து பேசிய கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இளைஞர் செயலாளர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து கட்சி பணிகள் பலவற்றில் அருண் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது..!


இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் இதுபோல குற்ற செயலில் ஈடுபட்ட அரணுக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து மாநில பா.ஜ.க இளைஞரணி செயலாளர் பதவி வழங்கியுள்ளார்..!