மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் பார்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

0
19

அரசு அனுமதியில்லாமல் இயங்கும் டாஸ்மாக் பார்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய தாலுக்கா பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பார்கள், தள்ளு வண்டிகள், உடனடிகடைகளில் தண்ணீர் பாட்டில்கள், தின்பண்டங்கள், பிளாஸ்டிக் குவளைகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கிக்கொண்டு மதுப் பிரியர்கள் ரோட்டோரமாக உள்ள கடைகள் தள்ளு வண்டிகள் போன்றவற்றில் விற்கக்கூடிய சுகாதாரமற்ற சில பொருட்களை வாங்கி சாப்பிடுகிறார்கள் இதனால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

இங்கு விற்பனை செய்யக்கூடியவர்கள் எந்தவித அனுமதியும் இல்லாமல் விற்பனை செய்வதோடு சமூக இடைவெளி பின்பற்றாமல் முகக் கவசங்கள் அணியாமலும் விற்பனை செய்கின்றனர். அதேபோல் வரக்கூடிய குடிமகன்களும் ( மதுப் பிரியர்கள்) சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல்துறையினர், சுகாதார ஆய்வாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் அருகிலுள்ள அனுமதி பெறாமல் இயங்கி கொண்டிருக்கக்கூடிய பார்களை இழுத்து மூடி கொரோனா நோய் தொற்றிலிருந்து பொது மக்களை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.