கழிவுநீர் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்க பட்டா இடத்திலிருந்து மரங்கள் வேருடன் சாய்ப்புஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் புகாரால் பரபரப்பு

0
8

கழிவுநீர் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்க பட்டா இடத்திலிருந்த மரங்கள் வேரோடு சாய்ப்பு, ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் புகாரால் பரபரப்பு

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி நகரம் வளர்ந்துவரும் தொழில்நகராக உள்ளது. இங்குள்ள 18 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டிபட்டியில் புறநகர் பகுதிகளும் குடியிருப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளுக்காக தெருக்களில் புதிதாக நடைபெற்றுவரும் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும்பணிகளின்போது ஒப்பந்தகாரர் தெருக்களின் ஓரத்தில் உள்ள பட்டா நிலத்தில் பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வரும் வேம்பு மலைவேம்பு, நாவல், நெல்லி உள்ளிட்ட மரங்களை தேவையில்லாமல் வேரூடன் பிடுங்கி சாய்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தெருவின் ஒரு பகுதியில் மட்டுமே கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட உள்ள நிலையில் தெருவின் இருபுறங்களிலும் உள்ள மரங்களையும் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது இப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது . இதுகுறித்து ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வருத்தம் தெரிவிக்கும் பொதுமக்கள் ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் முறையற்ற செயல்குறித்து தேனிமாவட்ட ஆட்சியருக்கும் புகார்செய்துள்ளனர். மழைக்காக மரங்களை வளர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு துறைகளின் மூலம் பலகட்ட திட்டங்களை தீட்டி பலஆயிரம்கோடி ரூபாய் செலவு செய்துவரும் நிலையில் மரங்களை பிடுங்கி அழிக்கும் ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு சமூகஆர்வலர்களிடையே வியப்பையும் வேதனையையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது