தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூர் அருகே கல்விளை யில் சிறுமி கொலை செய்யப்பட்டு உயிரிழந்ததை அடுத்து இன்று அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்ஆகியோர் இலவச வீட்டு மனை பட்டா, பணி நியமனம் ஆணை , பசுமை குடியிருப்பு திட்டம் ஆகிய சலுகைகளை வழங்கினார்.

0
41

திருச்செந்தூர்அருகே கல்விளை கிராமத்தில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு உயிரிழந்த சிறுமி முத்தார் குடும்பத்திற்கு அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அரசுசலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருச்செந்தூர் அருகே கல்விளை கிராமம் இந்திரா நகரில் கடந்த 15 ஆம் தேதி டிவி பார்க்க சென்ற போது சிறுமி முத்தார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு காட்டுப் பகுதியில் வீசி எறியப்பட்டார்.அந்த தகவல் அறிந்து நானும் மாண்புமிகு முதல்வர் அவர்களும் அம்மாவின் ஆசிப் படி விரைந்து நடவடிக்கை எடுக்க காவல்துறைமூலம் மேற்கொண்டோம் கொலையாளிகளை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம், இன்று சிறுமி முத்தாரின் தாயாருக்கு இந்திரா நகர் பகுதியில் 3 சென்ட் பட்டா நிலம் மற்றும் பசுமை வீடுகட்டவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது மற்றும் அவரது தாயாருக்கு சத்துணவு உதவியாளர் பணி நியமண ஆனையும் வழங்கியுள்ளோம், 8.15 லட்ச ருபாய் நிதி வழங்கப்பட ஆணை பிறப்பித்தனர் மற்றும் முதற்கட்டமாக 4.15 இலட்சம் வழங்கப்பட்டது இன்று மீதம் 4 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மின்சார வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அது மட்டுமல்லாது தாயார் உச்சிமாகளிக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.அதனைதொடர்ந்து செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பட்டா வழங்கியதற்கான இடத்தை பார்வையிட்டார்.