கொரோனா நெருக்கடி காரணமாக வேலை இழந்து வரும் வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்திய நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA.


கொரோனா நெருக்கடி காரணமாக வேலை இழந்து வரும் வெளிநாடு மற்றும் புலம் பெயர் தமிழர்களின் எதிர்காலம் குறித்த ஆலோசனை கூட்டம் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைப்பெற்றது.

Advertisement

இதில் நாகை தொகுதியை சேர்ந்தவர்கள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும், சென்னை, கோவை, பெங்களுர் போன்ற நகரங்களிலிருந்தும் புலம் பெயர்ந்து வந்துள்ளனர்.

இவர்களின் எதிர்கால நலன் கருதி விவசாயம், தொழில் வளம்,, கால்நடை, சிறு குறு தொழில்கள் ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், மானியங்கள், வங்கி உதவிகள் ஆகியன என்ன உள்ளது என்பது குறித்து அதிகாரிகளுடன் அடுத்தடுத்து சந்திப்புகள் நடைபெற்றது.

இதில் DIC துணை பொதுமேலாளர் கமலக்கண்ணன், ஊரக வளர்ச்சியை சேர்ந்த செல்வம், விவசாயத்துறை இணை இயக்குனர் பன்னீர், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் Dr. சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விரைவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் மேற்கண்ட ஒவ்வொரு துறையின் சார்பிலும் காணொளி கருத்தரங்கம் துறை சார்ந்த அதிகாரிகளை வைத்து நடத்துவது என்றும், அதில் தொழில் ஆர்வமுள்ள அனைவரையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கொரோணா நெருக்கடி காரணமாக வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்வோருக்கும், பிற மாநிலங்களிலிருந்து வேலையில் இருந்து திரும்பியவர்களுக்கும் இந்த வழிகாட்டல் முகாம் பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Back to top button