தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து பரபரப்பு

0
11

தேனிஅரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீவிபத்து பரபரப்பு

தேனிமாவட்டம் ஆண்டிபட்டியருகே கானாவிலக்கில் தேனிஅரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவக்கல்லூரி பிரேதப்பரிசோதனை அறை செல்லும் வழியில் உள்ள தற்காலிக துப்புரவுபணியாளர் துப்புரவு உபகரணங்கள் இருப்பு வைக்கும் அறையில் தீவிபத்து ஏற்பட்டது. அறையிலிருந்த நோயாளிகள் பயன்படுத்தும் வாளி, மறுசுழற்சியாக பயன்படுத்தும் துப்புரவு உபகரணங்கள் போர்வை, ஆகியவை தீயில் எரிந்தன. மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் வெளிப்புறமுள்ள பிளாஸ்டிக் சீட்டால் அமைக்கப்பட்ட அறையில் ஏற்பட்ட தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் புகைமூட்டம் பரவி அருகிலுள்ள மருத்துவக்கல்லூரி வார்டில் பரவியது. இதனால் நோயாளிகளிடத்தில் லும் மருத்துவக்கல்லூரி வளாகத்திலும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து ஆண்டிபட்டி தீயணைப்பு துறையினர் விரைந்துவந்து அரைமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை . மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறிய கானாவிலக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சேதமதிப்பு குறித்து மதிப்பிட்டு வருகின்றனர். இத்திடீர் தீவிபத்தால் தேனிஅரசுமருத்துவக்கல்லூரி வாளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது