நெல்லை மாநகரம் மேலப்பாளையத்தில்
அரசு நிர்ணயத்த தொகையைவிட கூடுதலாக கேஸ் ஏஜெண்ட் சப்ளையர் வசூலிப்பதாக தொடர் குற்றசாட்டு எழுந்துள்ளது இதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கு நினைவூட்டல் மனு
த.மக்கள்.ந.கா. இயக்கம்

0
16

தமிழ்நாடுமக்கள் நலன் காக்கும்இயக்கத்தின்
சார்பாக நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் நீனைவூட்டல்

நெல்லை மாநகர பகுதியான மேலப்பாளையத்தில் ĦB கேஸ் சப்ளை செய்யும் கேஸ் நிறுவனங்கள் பிரதமர் உஜ்வால திட்டத்தில் நிர்ணயம் செய்யபட்ட தொகைவிட கூடுதலாக. வசூலிக்கப்படுவதை

கடந்த ( 16:4:2020)ஏப்ரல் அன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் புகார் பிரிவான நம்ம நெல்லை வாட்ஸப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது
புகார் அளித்து காலம் கொரோனா காலம் முன்பாக அதன் பின்னர் தொடர் ஊரடங்கு என்பதால் அரசுபணிகள் நடைபெறுவதில் நடைமுறை சிக்கலை அறிந்து கால அவகாசம் கொடுத்து
நான்கு மாதம் கடந்துவிட்ட நிலையில் இதே நிலையில் தொடர்ச்சியாக HB.கேஸ் ஏஜெண்ட் நிறுவனத்தின் பணியாளார்கள்

தொடர்ச்சியாக கூடுதலாக ஒவ்வொரு கேஸ்க்கும் ₹ 50 வரை கூடுதலாக வசூலிப்பது நிறுத்தாமல் தொடர்கிறது பொது மக்களின் புகார் மீது
மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கு மிகுந்த கவலை அளிக்கிறது எனவே மீண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு நீனைவூட்டல் விதமாக புகார் மனவை சமர்பிக்கிறோம்
மேலும் இந்த புகார் சம்பந்தமாக சிறப்பு அதிகாரியை நியமித்து கூடுதலாக கட்டண வசூலிக்கும் கேஸ் நிறுவனங்களின் மீது உடனடியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொது மக்களின் சார்பாகவும் இயக்கத்தின் சார்பாகவும் பாதிக்கபட்ட நபர்களின் ஒருவனாக இந்த நினைவூட்டல் மனுவை சமர்பிக்கிறேன்

H.பாதுஷா
தமிழ்நாடுமக்கள் நலன்காக்கும் இயக்கம் மேலப்பாளையம் பகுதி பொறுப்பாளார்