தூத்துகுடி மாவட்ட ஆட்சித் தலைவரை SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்து மனு

0
16

தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்திப்பு மனு அளிக்கப்பட்டது

தூத்துக்குடி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரக்கூடிய கொரானா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்திடவும்..

உணவு சுகாதாரம் மருத்துவ வசதிகள் குறைபாடுகளால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இச்சீர்கேட்டை கண்டித்தும் மருத்துவர்கள் மற்றும்

சுகாதாரப் பணியாளர்களை உடனே அதிக அளவில் பணியமர்த்த வேண்டியும்

பொது மருத்துவ சிகிச்சைக்கு வரும் நபர்களுக்கு உயிருக்கு எந்த ஆபத்து இல்லாமல் பொறுப்புணர்வோடு அரசு மருத்துவர்கள் செயல்பட வேண்டும். என்றும்,

மேலும் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை என்ற பெயரால் வியாபாரிகளின் கடைகளை அடைக்க வலியுறுத்தும் சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SDPI கட்சியின் சார்பாக பல்வேறு இடங்களில் கொரானாநோயால் இறந்தவர்களை அவர்களின் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்து மனிதே நேயத்தையும் நல்லினக்கத்தையும் பேணி வருகிறோம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் SDPl கட்சியை தொடர்பு கொள்ளும்படியும் மனு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் SDPl கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் A.உஸ்மான், மாவட்டது.தலைவா் M.Aமுஹம்மது உமா், தூத்துக்குடிதொகுதிதலைவா் M.ஷேக் முகைதீன் அலி மற்றும் SDTU மாவட்ட தலைவா் முகைதீன் அப்துல் காதா் ஆகியோா் கலந்து கொண்டனர்