தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் மாநிலச் செயலாளர் மகாராஜன் கடும் கண்டனம்

0
76

8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமகொடுரர்களை கடுமையான பிணையில் வராத சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் இதுபோன்ற சம்பவங்ளுக்கு காரணமாக அமையும் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவும் சிறுமியை இழந்த குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் தமிழக அரசை வலியுறுத்தி
தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும் இயக்கத்தின்
மாநில செயலாளார் M.மகாராஜன் கண்டன அறிக்கை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த கல்விளை இந்திரா நகரைச்சேர்ந்த சேகர் உச்சிமகாளி ஆகியோரின் மகள் முத்தாரர் வயது 8 அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறாள்
இதற்கிடையே கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக உச்சிமகாளி தனியாக வாழ்ந்து வருகிறார் குடும்பசூழ்நிலை காரணமாக கூலி வேலைக்கு சென்று பிள்ளைகளை பராமரித்து வருகிறார் இந்நிலையில் வழக்கமாக பக்கத்தில் உள்ள விட்டிற்கு டிவி பார்த்தை வழங்க கொண்ட சிறுமி முத்தாரர் சம்பவத்து இன்று
காலையில் டிவி பார்க்க சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை இதன்பின்னர் சிறுமி வீடுதிரும்பதை அடுத்து ஊர் முழுவதும் தேடிய நிலையில் ஊரைவிட்டு 2 கிலோமீட்டர் வடலிவிளை கிராமத்திலுள்ள
பாலத்தின் அடியில் சிறுமியை பிணமாக கண்டுபிடித்துள்ளார்கள்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யபட்டு கொலை செய்யபட்ட தெரியவந்துள்ளது சிறுமியின் உடலில் ரத்தகாயங்களுடன்
இருந்த
நிலையில் காயங்களுடன் மீட்கபட்டு உடலை சாத்தான்குளம் மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்று அதன்பின்னர் உடல் கூறு பரிசோதனைக்காக. திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளது
சிறுமியின் படுகொலையில் அதே பகுதியை சேர்ந்த போதை இளைஞர்கள் இருவரை போலிஸ் கைதி செய்து விசாரித்து வருகிறார்கள் இது சம்பந்தமாக போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியபட்டுள்ளது
இந்த நிகழ்வில் சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இயக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்களையும்
தெரிவிக்கிறோம் சிறுமியை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும்
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்
இது போன்ற சம்பவங்களில் தொடராமல் இருக்க சாத்தான்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா போதைபொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதனை காவல்துறை கருத்தில்கொண்டு போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பலை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் அப்போதுதான் இதுபோன்ற துயர சம்பவங்களை நடைபெறமால் இருக்கும் காவல்துறை சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென பொதுநலன் கருதி இயக்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்