கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் போது நாகராஜ், பாஷா ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்

0
18

கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் போது நாகராஜ், பாஷா ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் விஷவாய் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களது உடல்களை கழிவுநீர்த் தொட்டியில் இருந்து மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் கீழசெக்காரக்குடி பகுதியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சோமசுந்தரம் என்பவர் தனது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.