நாகை மாவட்ட ஆட்சியரை நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு

0
37

கடற்கரை மேம்பாட்டு திட்டங்கள்.

நாகை கலெக்டருடன் மு.தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு.

ஜூலை-15

நாகப்பட்டினம், நாகூர் கடற்கரைகளை அழகுப்படுத்தி சிறந்த சுற்றுலாத் தலமாக்கும் பணிகளில் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அவர்கள் நேரில் சென்று இடங்களை பார்வையிட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இன்று கலெக்டரை சந்தித்த MLA அவர்கள், திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்ட மக்கள் சுற்றுலாவாக பார்க்க வரும் இடங்களாக இருப்பதால், மிக சிறப்பாக வசதிகளை இவற்றை கட்டமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பூங்கா, விளையாட்டு இடங்கள், கடைகள், உணவகங்கள், வாகன நிறுத்த வசதிகள், நடை பயிற்சி வசதிகள் ஆகியவைகளோடு இப்பணிகள் தொடங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பிறகு நாகை அரசு மருத்துவமைனயில் கொரணா தொடர்பாக நோயாளிகள் தரப்பிலிருந்து வந்த குறைகள் குறித்தும் , அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கலெக்டரிடம் கேட்டுக் கொண்டார்.