இரட்டை கொலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

0
31

இரட்டை கொலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகங்கை:
ராணுவ வீரரின் வீட்டில் நடைபெற்ற இரட்டை கொலை குற்றவாளியை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்ட பார்க்கவ குல சங்கம் சார்பில் முக்கூரணியில் ராணுவ வீரர் ஸ்டீபன் வீட்டில் நடைபெற்ற இரட்டை கொலை குற்றவாளியை கைது செய்ய கோரியும், குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

காளையார்கோவில் அருகே முக்கூரணி கிராமத்தில் இந்திய ராணுவத்தில் லடாக்கில் பணிபுரியும் ராணுவ வீரர் ஸ்டீபனின் குடும்பம் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை ராணுவ வீரரின் தாயார் ராஜகுமாரி மற்றும் மனைவி சினேகாவை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு சுமார் 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். பரபரப்பான இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் முகாமிட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்து 40 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாததால்,  சிவகங்கை மாவட்ட பார்க்கவ குல சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் குழந்தைசாமி தலைமையில்,  குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரியும், தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும் சிவகங்கை மாவட்ட  ஆட்சியர் ஜெயகாந்தனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குழந்தைசாமி மாவட்ட ஆட்சியர் இன்னும் இரு தினங்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கப்படும் என்றும், தமிழக அரசிடமிருந்து நிவாரண உதவியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.