வடமதுரை அருகே பெண்ணிடம் ஜோசியம் பார்ப்பதாக கூறி நகை பறித்த 2 பேர் சிக்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பெண்ணிடம் ஜோசியம் பார்ப்பதாக கூறி நகை பறித்து சென்ற இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வடமதுரை அருகே செல்லக்குட்டி ஊரைச்சேர்ந்த இரண்டு பேர் ஜோதிடம் பார்ப்பதாக கூறியுள்ளனர். பின்பு இவர்கள் கல்பட்டி சத்திரம் அருகே உள்ள சீத்தப்பட்டி சேர்ந்த இளம் பெண்ணிடம் ஜோசியம் பார்ப்பதாக கூறி நகை பறித்து சென்றுள்ளனர். இதை அறிந்த பொதுமக்கள் வாலிபர்களை விரட்டி பிடித்தனர் . இது குறித்து வையம்பட்டி போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.