சென்னை மாநகரம் முழுவதும் மரங்களில் ஆணி அடித்தல் விளம்பர பதாகை கட்டுவது போன்றவை தடைவிதித்துள்ளது
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்கிறது
இதனை தமிழக அரசு தமிழக முழுவதும் நடைமுறைபடுத்த வேண்டும்
தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும் இயக்கம் வலியுறுத்தல்

0
21

சென்னை மாநகர் முழுவதும் மரங்களின் மீது விளம்பர பதாகை ஆணிஅடித்து விளம்பரம் செய்யும் தனியார் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுவை வரவேற்கிறது தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் இதனை தமிழகம் முழுவதும் நடைமுறைபடுத்த வேண்டும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்

மரம் இந்த உலகத்தின்
உயிர் முச்சு மனித குலம் முதல் விலங்குகள் வரை அனைத்திற்கும் அடிப்படை சுவாசம் இதனை தங்கு தடையின்றி ஒயாமல் மரங்கள் எவ்விதமான பயனையும் எதிர்பார்க்காமல் வழங்கி வருவது இறைவனின் அருட்கொடையாகும்பயன்படுத்திக் கொள்ளவும் உள்ள அற்புதமான இறைக்கொடையாகும்
மரங்கள் மனிதனுக்கு மட்டுமின்றி சுற்றுச் சூழல் சிராக இருக்கவும் மரத்தின் பயன் அலாதியானது அவற்றிற்கு மனித செய்யும் கைமாறு இதுதான்

சமிபகாலமாக தமிழகத்தில் ஒரு விதமான கலாச்சாரம் தொடர்ந்து வருவதை பார்க்கிறோம் அதுதான்
மரங்களின் மீது விளம்பரம் செய்யும் புதியநாகரிகம் தோன்றியுள்ளது

இதனால் மரங்களின் சிரத்தன்மை சிதைந்து அவற்றின் உள்ள நுண்ணிய உயிரிகள் பாதிப்பு அடைந்து மரத்தின் வளர்ச்சியை சிதைத்து நாட்கள் செல்லலும் போது மரம் அழிந்துவிடும் நிலைக்கு மனிதர்கள் தள்ளிவிடுகிறார்கள்
இதனால் இழப்புகள் மனித சமுகத்திற்கு என்பதை அறிந்தும் மனிதர்கள் கண்டுக் கொள்வதில்லை மாறாக
விளம்பரம் செய்யவதை நோக்கத்திலே இதனை அறிவதுதில்லை நவீன காலத்தில் விளம்பரம் செய்யஆயிரம் வழிகள் இருக்க அவற்றைவிட்டு மரங்களை சிதைப்பது சரியான செயல் அல்ல

மரங்களின் மீது விளம்பரபாதை ஆணி அடித்து மரத்தின் மீது இரும்பு கம்பிகளை கொண்டு பதாகை அமைப்பதை தடுக்க வேண்டும் என பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் சமுக ஆர்வலர்களின்
தொடர்கோரிக்கையாக பல ஆண்டுகளாக இருந்துவருகிறது

இதுசம்பந்தமாக தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக பலமுறை கோரிக்கையை தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக கடந்த 2015 ஆண்டு முதல் நம்மால் முடிந்த தொடர் மனுக்களின் வாயிலாக கோரிக்கை செய்துள்ளது குறிபிடதக்கது

இந்நிலையில் திங்கள் அன்று
சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக சென்னை மாநகரம் முழுவதும் மரத்தின் மீது விளம்பரம் செய்த நிறுவனங்களின் மீது எடுத்த நடவடிக்கை சம்பந்தமாக அறிக்கை கேட்டுள்ளது இதனை வரவேற்கிறோம்
சென்னை மாநகரத்திற்கு உத்தரவு இட்டுயுள்ளதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மரங்களின் மீது விளம்பர பதாகை நிகழ்வை தடைசெய்தும் இதனை மீறும் நிறுவனங்கள் தனிநபர்களின் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க அரசாணையும் குற்றவியல் தண்டனையும் கொண்டுவர வேண்டும்
தமிழக அரசை வலியுறுத்துகிறது
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம்
க.முகைதீன்
மாநில பொதுச்செயலாளார்